நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் பன்னிட்டார் - டி.இமான் பரபரப்பு குற்றச்சாட்டு
Oct 17, 2023, 11:43 IST
நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் பன்னிவிட்டதாக பிரபல இசையமைப்பாளர் டி.இமான் கூறியுள்ள குற்றச்சாட்டு திரையுலகிம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிவகார்திகேயன். இவரது நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களுக்கு பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து இருந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. சீமராஜா திடைப்படத்திற்கு பின்னர் டி.இமான் சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு இசையமைக்கவில்லை.