இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைப்பு... தறுதலைகளின் வேலையா? தற்குறிகள் வேலையா?
சென்னையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி மர்ம நபர்கள் சிலர் அடித்து உடைத்ததாக புகார் எழுந்துள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொட்டிவாக்கத்தில் உணவகம் ஒன்றில் சாப்பிடச் சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கார் கண்ணாடியை உடைத்து விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜயை விமர்சனம் செய்தார் என்பதற்காக ஜேம்ஸ் வசந்தன் காரை சேதப்படுத்தியிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டுவருகின்றனர்.
இதுகுறித்து முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன், “தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை. இன்று மதியம் நான் ஒரு உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றபோது” எனக் குறிப்பிட்டுள்ளார்.