×

இலங்கையில் இருந்து படகில் தமிழகத்திற்கு தப்பமுயன்ற கொலை குற்றவாளி கைது

இலங்கை இலங்கையில் மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிட்டு, படகில் இந்தியாவிற்கு தப்ப முயன்ற நபரை அந்நாட்டு கடற்படையினர் கைதுசெய்தனர். இலங்கை திருகோணமலை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் லட்சுமணன். இவர் தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு திரும்பி சென்ற அவர், தனது மனைவி மற்றும் மகளை கொலைசெய்த குற்றத்திற்காக கைதாகி, ஜாமினில் வெளியே வந்துள்ளார். வழக்கில் விரைவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், தனக்கு
 

இலங்கை

இலங்கையில் மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிட்டு, படகில் இந்தியாவிற்கு தப்ப முயன்ற நபரை அந்நாட்டு கடற்படையினர் கைதுசெய்தனர். இலங்கை திருகோணமலை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் லட்சுமணன். இவர் தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு திரும்பி சென்ற அவர், தனது மனைவி மற்றும் மகளை கொலைசெய்த குற்றத்திற்காக கைதாகி, ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

வழக்கில் விரைவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், தனக்கு எதிராக தீர்ப்பு வரும் என்ற அச்சத்தில் விக்னேஷ் லட்சுமணன், தமிழகத்திற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டார். இதற்காக, திரிகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தப்பிவந்த அவர், பருத்தித்துறை கடல் வழியாக படகில் நேற்று அதிகாலை இந்தியாவிற்கு தப்ப முயற்சித்தார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் படகை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது படகோட்டி குணேஸ்வரன் மற்றும் விக்னேஷ் லட்சுமணன் ஆகியோர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த கடற்படையினர், இவரையும் முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், கொலை வழக்கில் தொடர்புடைய லட்சுமணன் இந்தியாவிற்கு தப்ப முயன்றது தெரியவந்தது. பின்னர், இருவரையும் கைதுசெய்து பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்த கடற்படையினர், படகையும் பறிமுதல் செய்தனர்.