☰
×

சிவகங்கை ரவுடி சுள்ளான் மதன் கொலை- 10 பேர் கைது 

 

சிவகங்கை மாவட்டம் மேலமங்கலம் ரவுடி சுள்ளான் மதன் கொலை வழக்கில் மானாமதுரையைச் சேர்ந்த சந்துரு (19) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் மேலமங்கலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில், 15-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி 'சுள்ளான்' மதன் என்பவர் கடந்த வாரம் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையிலேயே ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இரட்டை கொலை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலிருந்து அண்மையில்தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 

இந்நிலையில் ரவுடி சுள்ளான் மதன் கொலை வழக்கில் மானாமதுரையைச் சேர்ந்த சந்துரு (19) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் பிடிக்கத் தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.  இதனிடையே ரவுடி சுள்ளான் மதன் கொலை குறித்து சமூக ஊடகங்களில் பதற்றத்தை தை ஏற்படுத்தும் வகையில் பதிவுகள் போட்டது தொடர்பாக 6 FIR-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 41 இன்ஸ்டா, 3 பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் வகையில் பதிவிடுபவர்கள் கைது செய்யப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாவார்கள் என சிவகங்கை மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.