×

"முரசொலி மாறன் அவர்களின் நினைவுநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்" - முதல்வர் ஸ்டாலின் 

 

முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

முரசொலி மாறன் முரசொலி வார இதழின் ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர். மூன்று முறை மத்திய  அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். பன்னாட்டு வணிக விலை பேரங்களில் (GATT) இந்தியாவிற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பாராட்டுக்கள் பெற்றவர். இவர் ஒரு செய்தியாளராகவும் திரைப்பட எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். இவர் தான் கதை-வசனம் எழுதிய முதல் திரைப்படமான குலதெய்வம் படத்தின் தயாரிப்பாளர் ஏ. வி. மெய்யப்பச் செட்டியார். அவர்கள் இவருக்கு மாறன் என்ற பெயருடன் சேர்த்து அவர் மாமா கருணாநிதி நடத்தி வந்த பத்திரிக்கையின் பெயரான முரசொலி என்பதை அடையாளமாக சேர்த்து முரசொலி மாறன் என்று பெயர் வைத்தார்.

திராவிட இயக்கத்தின் அறிவுப்பெட்டகம்!

தலைநகரில் கழகத்தின் முகம்!

நாடாளுமன்றத்தில் மாநில உரிமையின் குரல்!

உலக அரங்கில் வளரும் நாடுகளுக்காக வாதாடிய மதியூகி!

இப்படி எத்தனை சொன்னாலும் தகும் தகுதிக்குரிய மதிப்புக்குரிய முரசொலி மாறன் அவர்களின் நினைவுநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்! என்று குறிப்பிட்டுள்ளார்.