‘ராமாயணா’ திரைப்படம் திரையிடப்படும்போது சைவ உணவு மட்டுமே வழங்க மல்டிபிளக்ஸ் நிறுவனம் அறிவிப்பு!
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல மல்டிபிளக்ஸ் நிறுவனமான எஸ்.வி.எஃப் சினிமாஸ் (SVF Cinemas), மேற்கு வங்கம் முழுவதும் உள்ள தனது 30 திரையரங்குகளிலும் ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’ (Ramayana: Rise of a Legend) திரைப்படம் திரையிடப்படும்போது, திரையரங்குகளுக்குள் சைவ உணவுகளை மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளது.
மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் முடிவுபார்வையாளர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.வி.எஃப் சினிமாஸ் தெரிவித்துள்ளது.
ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தின் காட்சிகளுக்கு மட்டுமே இந்தக் கட்டுப்பாடு பொருந்தும். மற்ற திரைப்படங்கள் திரையிடப்படும்போது, அசைவ உணவுகள் உள்ளிட்ட வழக்கமான உணவு வகைகள் அனைத்தும் வழக்கம் போல் கிடைக்கும் என்றும், திரையரங்குக்கு வெளியே உள்ள கவுண்டர்களில் அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படும் என்றும் திரையரங்கு நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.