×

அக். 7ம் தேதி பெரியாறு அணையை திறக்க முதல்வர் உத்தரவு!

பாசனத் தேவைக்காக 120 நாட்களுக்கு பெரியாறு அணையை திறக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தின் முக்கிய அணைகள் நிரம்பியதோடு, கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதனால் மேட்டூர் , பவானி சாகர் உள்ளிட்ட அணைகளில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் வரும் 7 ஆம் தேதி முதல்
 

பாசனத் தேவைக்காக 120 நாட்களுக்கு பெரியாறு அணையை திறக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தின் முக்கிய அணைகள் நிரம்பியதோடு, கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதனால் மேட்டூர் , பவானி சாகர் உள்ளிட்ட அணைகளில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விடப்படுகிறது.

இந்த நிலையில் வரும் 7 ஆம் தேதி முதல் தேனி பெரியாறு அணையை திறக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 120 நாட்களுக்கு திறக்கப்படும் நீரால் பழனிவேல்ராஜன் கால்வாயின் கீழ் உள்ள 4,614 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 7ம் தேதியன்று தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அணையை திறந்து வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.