மனைவி சாக்ஷியுடன் சென்னை வந்தடைந்த எம்.எஸ்.தோனி..!
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷியுடன் சென்னை வந்தடைந்துள்ளார்.
இந்த விழாவில் புவனேஷ்வர் குமார், டேல் ஸ்டெய்ன், டேனியல் வெட்டோரி மற்றும் கேன் வில்லியம்சன் உள்ளிட்ட பல கிரிக்கெட் நட்சத்திரங்களும் கலந்து கொள்கின்றனர்.
19 ஆண்டுகால ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக நவம்பர் 17-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு, தோனி சென்னைக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.
ஐபிஎல் 2027 தொடர் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக (Team Mentor) தோனி செயல்பட உள்ளார்.