“யாருடைய நிர்பந்தத்தாலும் நான் தவெகவில் இணையவில்லை”- எம்.ஆர்.விஜயபாஸ்கர்
தவெகவில் இணைய யாரும் அழுத்தம் தரவில்லை... என் சொந்த விருப்பத்தில்தான் இணைந்தேன் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளர்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், “தவெகவில் சேர எனக்கு அக்கட்சியில் இருந்தோ அல்லது அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றவர்களிடம் இருந்தோ யாரும் அழைப்பு விடுக்கவில்லை. தவெகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜ, சிவபதி போன்றோரிடம், கட்சிக்கு போன பின்று எதுபோன்ற சூழல் உள்ளது என்று கேட்டேன். அதைத்தான் நான் பேட்டியில் சொன்னேன். நிர்வாகிகளின் கருத்தை கேட்டு எடுத்ததை பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் தவறுதலாக வெளியிட்டுள்ளனர். இது என் சுயமான முடிவு. நிர்வாகிகளின் கருத்தை கேட்டு, எந்த அமுத்தமும் இல்லாமல் முடிவெடுத்து, பல கட்ட யோசனைக்கு பிறகு நான் தவெகவில் சேர்ந்தேன். இது முழுத்க முழுத்க நான் எடுத்து முடிவு. தவெவுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிமுக நிர்வாகிகதுக்கு இருந்தது. அதனால தான் இன்று ஒன்றிய, நகர, பகுதில் செயலாளர்கள் என்னுடன் வந்து தவெகவில் இணைந்துள்ளனர். என் சுய விருப்பத்தால் தான் நான் தவெகவில் இணைந்தேன். தவெக அல்லது தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் நிர்பந்தத்தால் நான் தவெகவில் இணையவில்லை. இனாம் நிலப் பிரச்சனைக்கு, பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் சிறப்பு குழு அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.