“LABEL, STICKER ஆட்சியாகத்தான் இதைப் பார்க்கிறேன்”- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
திமுக அறிவித்த திட்டங்களை வரிபிறழாமல் அப்படியே அறிவித்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அந்த திட்டம் குறித்து இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை. திமுக ஆட்சியில் 77,000 விவசாயிகளுக்கு மானியத்துடன் இயந்திரங்கள் அளிக்கப்பட்டன. இந்த ஆட்சியில் அதன் மானியம் குறைக்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர் பெயரில் ஆதி திராவிட விவசாயிகளுக்கு திமுக அறிவித்த மானிய திட்டத்தையே பெயரை மாற்றி அறிவித்துள்ளனர். திமுக அறிவித்த திட்டங்கள் வரிபிறழாமல் அப்படியே அறிவித்துள்ளனர். LABEL, STICKER ஆட்சியாகத்தான் இதைப் பார்க்கிறேன். வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. வேளாண் பட்ஜெட்டில் பல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும் குறைத்துள்ளனர்.
தவெக அரசின் வேளாண் பட்ஜெட்டில் உழவர்களுக்கு ஏதும் புதிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படி எதுவும் இல்லை. “மாற்றம், மாற்றம் என கூறி வந்தவர்கள், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. திமுக ஆட்சியின் திட்டங்களையே பெயர் மாற்றி புதியது போல அறிவித்துள்ளார்கள்” என்றார்.