ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணுவுடன் மிருணாளினி ரகசிய திருமணம்!
தமிழ் நடிகை மிருணாளினி ரவி, ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணுவை கரம் பிடித்தார்.
'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை மிருணாளினி ரவிக்கும், ஆன்மீகப் பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கும் மலேசியாவின் லங்காவி தீவில் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகை மிருணாளினி ரவி 'சாம்பியன்', 'எதிரி', 'எம்.ஜி.ஆர் மகன்', 'கோப்ரா', 'ரோமியோ' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த பிரபல ஆன்மீக பேச்சாளரான மகாவிஷ்ணுவுக்கு இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், நேற்றைய தினம் திருமணம் செய்துள்ளனர்.