×

"தவெகவை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது"- எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆவேசம்

 

தவெக என்பது இன்னொரு புதிய அதிமுக என்று சொல்லி இருக்கிறார்.. எந்த ஒரு விளம்பரம், பணம், அதிகாரம் இல்லாமல் 108 இடங்களை ஜெயிக்க முடிந்தது என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கரூரில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு, 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “தமிழக வெற்றிக் கழகத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. இந்திய அரசியல் வரலாற்றில் இரண்டே இரண்டு அதிசயம் தான் நடந்தது..! கட்சியை ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்துள்ளார் முதலமைச்சர் விஜய்..! இதுபோல் இதற்கு முன்னும் நடந்ததில்லை.. இனிமேலும் நடக்காது.. அவர் ஒருவரால் மட்டும் தான் முடியும்.. அ.தி.மு.கவில் இருந்த அடிமட்ட தொண்டன் கூட த.வெ.கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.. அதனால் தான் எந்த ஒரு செலவும் இல்லாமல் அமைதியாக ஆட்சியை பிடித்து விட்டார் தளபதி.. தவெக என்பது இன்னொரு புதிய அதிமுக என்று சொல்லி இருக்கிறார்.. எந்த ஒரு விளம்பரம், பணம், அதிகாரம் இல்லாமல் 108 இடங்களை ஜெயிக்க முடிந்தது” என்றார்.