“என் உயிருக்கு ஆபத்து உள்ளது; செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும்தான்..”- எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கடந்த 2021 தேர்தலில் என்னை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள் என கரூர் சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய கரூர் சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், “என் உயிருக்கு ஆபத்து உள்ளது. என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். எனக்கோ, என் குடும்பத்தினருக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் ஏதேனும் நடந்தால் செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும்தான் அதற்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். பிரச்சாரத்தின் போது என்னை ஒரு சிலர் பின் தொடருகின்றனர். கடந்த 2021 தேர்தலில் என்னை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள். தேர்தலில் நான் வெற்றி பெற்றால் என்னை கொலை செய்ய திட்டமிருட்டிருந்தனர். தேர்தலில் தோல்வியடைந்ததால் உயிர் தப்பினேன்.
அதன்பிறகு மாவட்ட ஊராட்சி துணை தலைவர் இடைத்தேர்தலின்போது என்னை தாக்க முயற்சித்தனர். வேடசந்தூர் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காரில் வந்தப்போது சிலர் தடுத்து தாக்கி மாவட்ட அவைத் தலைவரை கடத்தி சென்றனர். என் மீது ஆசிட் அடிக்க முயன்றனர். மானாமதுரை, மதுரை பகுதியில் இருந்து ரவுடிகள், குண்டர்கள் எம்.சி.சங்கர் வரவழைத்து என் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார். தற்போது தேர்தலை நிறுத்த முயற்சி நடக்கிறது. என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த டிசம்பர் மாதமே மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பாதுகாப்பு புகார் அளித்திருந்தேன்” என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.