×

கரூரில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித பட்டிகள்! வாக்காளர்களை அடைத்து வைக்க திமுக திட்டம்... ஆதாரத்துடன் புகார்

 

கரூர் தொகுதியில் வாக்காளர்களை அடைத்து வைக்க அனுமதியின்றி 100 பட்டிகள் தயார் நிலையில் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகைப்பட ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். கரூரில், சுமார் 100 இடங்களில் திமுக சார்பில் ஆடு, மாடுகளை அடைப்பது போல மனிதர்களை அடைப்பதற்கு பட்டிகள் தயார் செய்துள்ளனர். C-vigil புகார் அளித்தால் சரியான முறையில் பதில் வரவில்லை. கரூர் தொகுதியில் 48 இடங்களில் போடப்பட்டுள்ள பட்டிகளின் புகைப்பட ஆதாரங்களை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்து உள்ளோம். பொதுமக்களிடம் போட்டோ, ஆதார் கார்டு வாங்கி அவர்களை உள்ளே உட்கார வைப்பதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். அங்கு அவர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட கவனிப்புகள் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். 

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளுக்கு மட்டும் தனி சட்டம் உள்ளது. குறிப்பாக கரூர் தொகுதிக்கு மட்டும் சிறப்பு சட்டம் உள்ளது. ஆர்.கே.நகர், ஈரோடு ஃபார்முலா போல கரூரிலும் தேர்தலை சந்திக்க உள்ளனர். இந்த மாதிரி அமைக்கப்பட்டுள்ள பட்டிகளுக்கு எந்தவித அனுமதியும் வாங்குவதில்லை. கோவில் இனாம்
நிலங்களில் செட் போட்டுள்ளனர்.  மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். தேர்தல் ஆணையம் முறையாக செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.