×

கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்!

கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெருந்தொற்றாக பரவி வந்து கொண்டிருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்கிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, எம்பி வசந்தகுமாரின் உடல்நிலை மோசமாக
 

கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெருந்தொற்றாக பரவி வந்து கொண்டிருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்கிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, எம்பி வசந்தகுமாரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் ஐசியு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், வசந்தகுமாரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், எம்பி வசந்தகுமாரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று வரை அவரது உடல்நிலை சீராக இருந்ததாகவும், இன்று காலையில் இருந்து அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதாகவும் அவரது நாடித்துடிப்பு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.