×

விஜயகாந்த் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சுதீஷ் எம்பி

 

தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ், திமுக கூட்டணியில் மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக,அதிமுக கட்சியை சார்ந்த மற்றும் அதன் கூட்டணியை சார்ந்த 6 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். குறிப்பாக திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள, தேமுதிக கட்சியின் பொருளாளர் எல்.கே சுதீஷ், முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் வெற்றிச் சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார். அதோடு விஜயகாந்த் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதற்கு முன்னதாக கட்சி அலுவலகம் வந்த அவருக்கு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மேலும் பூங்கொத்து கொடுத்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எல். கே சுதிசை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அங்குள்ள பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.