×

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வி.சி.க எம்.பி ரவிக்குமார் நன்றி!

 


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் அறிவிப்புகளின் படி நிதி மற்றும் மனிதவள மேலாண்மை  அறிக்கையின்படி 2021- 22 ஆம் கல்வி ஆண்டு முதல் முழு நேர முனைவர் பட்டம் பட்டப்படிப்பிற்கான கல்வி ஊக்கத் தொகை திட்டத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானத்தை 8 லட்சமாக உயர்த்தியும் மற்றும் ஒரு மாணவருக்கு ஒரு லட்சம் வீதம் ஆயிரத்து 600 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல் குறித்த ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி தமிழக அரசின் அரசாணையின்படி 2013 -14 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் முழு நேர முனைவர் பட்டப் படிப்பை மேற்கொள்ள முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "விசிகவின் கோரிக்கையை ஏற்று எஸ்சி, எஸ்டி மாணவர்கள் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் என இருந்ததை 8 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.