×

தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி..!

 

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடிய நிலையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார். 

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பேசியபோது, தமிழ்நாட்டை உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மையமாக உருவாக்கும் நோக்கில், சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என அறிவித்தார்.

தமிழ்நாடு ஏற்கனவே ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. சென்னை அருகேயுள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட், கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வே உள்ளிட்ட பந்தயத் தளங்களில் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், புதிதாக அமைக்கப்படவுள்ள மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் Formula 1, Formula 2, Formula 3, Formula 4 உள்ளிட்ட சர்வதேச தரத்திலான கார் பந்தயங்களை நடத்தும் வகையில் நவீன பந்தயத் தளம் மற்றும் அதற்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்படும்.

மேலும், மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வமும் திறமையும் கொண்ட தமிழக இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு முறையான மற்றும் தொழில்முறை பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தமிழக இளைஞர்கள் தயார்படுத்தப்படுவார்கள் என முதலமைச்சர் தெரிவித்தார்.