வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..! இன்று கோவையில் போக்குவரத்து மாற்றம்..!
கோவையில் மறக்க முடியாத சம்பம் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற்ற தொடா் குண்டுவெடிப்பு சம்பவம் தான். இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 58 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு ஆண்டுதோறும் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் கோவையில் ஹிந்து அமைப்புகள் சாா்பில் வருகிற இன்று நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதை முன்னிட்டு, கோவை மாநகரில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆர்.எஸ். புரம் பகுதியில் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
1) வெங்கடசாமி ரோடு, பொன்னுரங்கம் ரோடுகளில் இன்று வாகன பொது போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
2) பூமார்க்கெட், மேட்டுப்பாளையம் ரோட்டிலிருந்து ஆர்.எஸ்.புரம் வழியாக லாலிரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் சிந்தாமணி சந்திப்பு, பெரியசாமி ரோடு வழியாக செல்ல வேண்டும்.
3) புரூக்பாண்ட் சாலையிலிருந்து, சிந்தாமணி ரவுண்டானாவிலிருந்து டி.பி. ரோடு, ஆர்.எஸ்.புரம் வழியாக லாலிரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் பெரியசாமி ரோடு வழியாக செல்ல வேண்டும்.
4) சிந்தாமணியில் இருந்து காந்திபார்க்குக்கு செல்லும் வாகனங்கள் பெரியசாமி ரோடு வழியாக தடாகம் ரோடு அடைந்து செல்ல வேண்டும்.
5) காந்திபார்க் ரவுண்டானாவிலிருந்து டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் வரும் வாகனங்கள் மெக்ரிக்கர் ரோடு வந்து பூமார்க்கெட் வழியாக மேட்டுப்பாளையம் ரோடு வழியாக செல்ல வேண்டும்.
6) லாலிரோடு ரவுண்டானாவிலிருந்து ஆர்.எஸ்.புரம் வரும் அனைத்து வாகனங்களும் மேற்கு சம்பந்தம் ரோடு. டி.பி. ரோடு, கிழக்கு சம்பந்தம் ரோடு வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டும்.
7) ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோடு, டி.வி.சாமி ரோடு கிழக்கு மற்றும் மேற்கு. கௌலிபுரவுன் சாலைகளில் செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்த தடை
8) இன்று ஆர்.எஸ்.புரம் மற்றும் கௌலிபுரவுன் ரோடு, மருதமலை ரோடுகளில் கனரக சரக்கு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.