கணவருக்கு உருக்கமான வீடியோ அனுப்பிவிட்டு, 10 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்த தாய்!
விருதுநகர் மாவட்டம், சூலக்கரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் முத்துகுமார். இவரது மனைவி பாண்டிசெல்வி. முதல் கணவரை பிரிந்த பாண்டிசெல்விக்கு, அவர் மூலம் 15 வயது மகள், 10 வயதான பிரதீப் என்ற மகன் இருந்தனர்.
நேற்று மதியம், 3:30 மணிக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கி சென்ற அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில், மகனை தள்ளி கொலை செய்து, பாண்டிசெல்வி தானும் தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசார் விசாரித்தனர்.
பாண்டிச்செல்வி தற்கொலைக்கு முன், முத்துக்குமாருக்கு அனுப்பிய வீடியோவில், ‘கடனை அடைக்க முடியவில்லை. நானும், என் மகனும் கோவிலுக்கு போகிறோம். மகளை நன்றாக பார்த்துக்கொள்’ என, உருக்கமாக பேசியுள்ளார்.
தண்டவாளம் அருகே நடந்து வந்த போது, அம்ரித் பாரத் ரயில் வருவதை பார்த்த பிரதீப், தாயின் பிடியில் இருந்து தப்பி ஓடி உள்ளார். ஆனால், அவரை இறுக பிடித்து, தண்டவாளத்திற்கு அழைத்து வந்து, ரயிலில் மோத செய்த பாண்டிசெல்வி, தானும் தற்கொலை செய்துள்ளார். இவரிடம், தினசரி, 1,000 ரூபாய் கந்துவட்டி வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். titles