×

முதல்வர் டெல்லி சென்ற விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட தாய்: பரபரப்பு தகவல்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்ற விமானத்தில் இருந்து குழந்தையுடன் தாய் ஒருவர் இறக்கிவிடப்பட்டுள்ளார். இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக முதல்வர் பழனிசாமி நேற்று மதியம் டெல்லி சென்றடைந்தார். சென்னையில் இருந்து விஸ்தாரா விமானத்தில் அவர் சென்றார். சென்னையில் அந்த விமானம் புறப்படவிருந்த போது 4 மாத குழந்தை ஒன்று நீண்ட நேரம் அழுதுக் கொண்டே இருந்ததால், சக பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக, குழந்தையும் தாயும் இறக்கிவிடப்பட்டு குழந்தையின் தந்தையை மட்டும் ஏற்றிக் கொண்டு
 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்ற விமானத்தில் இருந்து குழந்தையுடன் தாய் ஒருவர் இறக்கிவிடப்பட்டுள்ளார்.

இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக முதல்வர் பழனிசாமி நேற்று மதியம் டெல்லி சென்றடைந்தார். சென்னையில் இருந்து விஸ்தாரா விமானத்தில் அவர் சென்றார். சென்னையில் அந்த விமானம் புறப்படவிருந்த போது 4 மாத குழந்தை ஒன்று நீண்ட நேரம் அழுதுக் கொண்டே இருந்ததால், சக பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக, குழந்தையும் தாயும் இறக்கிவிடப்பட்டு குழந்தையின் தந்தையை மட்டும் ஏற்றிக் கொண்டு விமானம் புறப்பட்டுள்ளது.

இதே விமானத்தில் தான் முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்ற நிலையில், குழந்தையுடன் தாய் இறக்கிவிடப்பட்டு 15 நிமிடம் கழித்து தான் முதல்வர் விமானத்தில் ஏறியதாக கூறப்படுகிறது. அழுதுக் கொண்டிருந்த குழந்தை சமாதானம் ஆனதும் சில மணி நேரம் கழித்து, தாயும் குழந்தையும் அடுத்த விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்களாம்.

இது குறித்து பேசிய சென்னை விமான நிலைய இயக்குநர், உடல்நலக்குறைவால் குழந்தையை அழுதுக் கொண்டே இருந்ததால் இந்த முடிவை பரிசீலனை செய்தோம். குழந்தை அழுதால் விமானத்தில் இருந்து இறக்கிவிட வேண்டும் என்ற எந்த விதிமுறையும் இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும் இது குறித்து விளக்கம் அளித்த விமான நிறுவனத்தின் மேலாளர், குழந்தையின் தாய் தாமாக முன்வந்து விமானத்தில் இருந்து இறங்கிக் கொள்வதாக கூறியதால், அவர்களை இறக்கி விட்டு விமானம் புறப்பட்டதாக கூறியிருக்கிறார்.