×

கால்வாயில் தவறி விழுந்து தாய், மகள் பரிதாப மரணம்; மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை அயனம்பாக்கதில் வசித்து வந்த பிரிசில்லா(50) தனது மகள் ஈவாலின்(20) உடன் மதுரவாயிலில் இருந்து அயனம்பாக்கத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மதுரவாயல் பைபாஸ் சாலையில் செல்லும் போது, அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் நிலை தடுமாறி அப்பகுதியில் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்துள்ளது. சுமார் 12 அடி ஆழம் கொண்ட அந்த கால்வாயில் விழுந்த ஈவாலின் மற்றும் பிரிசில்லா படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு
 

சென்னை அயனம்பாக்கதில் வசித்து வந்த பிரிசில்லா(50) தனது மகள் ஈவாலின்(20) உடன் மதுரவாயிலில் இருந்து அயனம்பாக்கத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மதுரவாயல் பைபாஸ் சாலையில் செல்லும் போது, அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் நிலை தடுமாறி அப்பகுதியில் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்துள்ளது. சுமார் 12 அடி ஆழம் கொண்ட அந்த கால்வாயில் விழுந்த ஈவாலின் மற்றும் பிரிசில்லா படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஆம்புலன்ஸிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பைக்கில் இருந்து தவறி மழை நீர் கால்வாயில் விழுந்து தாய் மகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.