கணவனை இழந்த தாய் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை
தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி அருகே கணவனை இழந்த தாய் இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கம் வள்ளலார் நகரில் வசித்து வந்தவர் ஷம்சியா (வயது 26). இவரது கணவர் ஆசிப். இவர்களுக்கு ஆசிபா (வயது 10), அப்தர் (வயது 5 ) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆசிப் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே கடன் அதிகமாக இருந்த நிலையில் கணவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சான்சியா தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். தொடர்ந்து கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் மன உளைச்சலுடன் இருந்த அவர் தனது குழந்தைகளை வெளியில் செல்லலாம் என அழைத்து வந்து ஐஸ்கிரீம், பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கி கொடுத்துவிட்டு மாடம்பாக்கம் அருகே உள்ள விவசாய கிணற்றில் தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்துள்ள கடிதத்தையும் கைப்பற்றி குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
படப்பை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று பேரின் உடலை மீட்ட நிலையில் தொடர் விசாரணை நடைபெற்ற்வருகிறது. இறந்தவர்களின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுது வரும் நிலையில் ஏராளமான பொது மக்கள் பகுதியில் திரண்டு உள்ளனர். இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து படப்பை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.