×

#BREAKING சென்னையில் அதிர்ச்சி! ஓமந்தூரார் மருத்துவமனையில் கான்கிரீட் இடிந்து விழுந்து தாய், மகள் படுகாயம்

 

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நுழைவு வாயிலின் கான்கிரீட் இடிந்து விழுந்து இருவர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் நுழைவாயிலின் கான்கிரீட் இடிந்து விழுந்து தாய், 7 வயது சிறுமி படுகாயமடைந்தனர். சென்னை  ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கணவரை பார்க்க வந்த மனைவி, மகள் மீது நுழைவு வாயிலின் கான்கிரீட் இடிந்து விழுந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். தலையில் காயமடைந்த சத்யா அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 7 வயது மகள் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.