ஆண்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்த பெண்கள்!
Apr 24, 2026, 13:47 IST
தமிழ்நாட்டில் இதுவரை 16 முறை சட்டசபை தேர்தல் நடைபெற்றுள்ளது.
இதில், 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 78.2 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் இதுவரை பதிவான அதிகப்படியான வாக்கு சதவீதமாக இருந்து வந்தது.
இந்நிலையில், தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் 85.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மொத்தமுள்ள பெண் வாக்காளர்களில் 85.76 சதவீதம் பேரும், ஆண் வாக்காளர்களில் 83.57 சதவீதம் பேரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.