×

தமிழகத்தில் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசு வேலைக்காக காத்திருப்பு..

 

தமிழகத்தில்  75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசு வேலைக்காக  காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்தவரகள் அரசு வேலைக்காக தங்களது விவரங்காளை அளித்து, வேலைவாப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பார்கள். அப்படி  தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 75,88,159 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில், ஆண்கள் 35,56,087  பேரும்,  பெண்கள் 40,32,046 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள்  228 பேரும்  வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி வரை வேலை வாய்ப்புக்காக்காக பதிவு செய்தவர்களின் வயது வரையான விவரங்கள் தற்போது  வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 17.81 லட்சம்  பேரும், 19 முதல் 23 வயதுவரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 16.14 லட்சம் பேரும், 24 வயது முதல் 35 வயது வரை உள்ள அரசு பணி வேண்டி காத்திருக்கும் வேலை நாடுநர்கள் 28,60,359 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 33 வயது முதல் 57 வயது வரை விடுபட்ட பதிவுதாரர்கள் 13,20,337 பேர், 58 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 11,386  பேர் என தெரிவித்துள்ளது. அதேபோல மாற்றுத்திறனாளி பதிவு செய்துள்ள விவரங்கள் வெளியிட்டுள்ளது. மொத்தமாக மாற்றுத்திறனாளிகள் வேலைக்காக 1.38 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.