×

பரிசீலனையில் மாதந்தோறும் மின் கட்டண ரீடிங்… அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

தமிழகத்தில் மாதந்தோறும் மின்சாரக் கட்டணத்தை அளவிடுவது பற்றி தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் இது பற்றி முதல்வருடன் ஆலோசனை செய்யப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார கட்டணம் அளவீடு செய்யப்படுகிறது. அரசு நிர்ணயித்துள்ள ஸ்லாப் கட்டணங்கள் காரணமாக மாதம் தோறும் மின்சார கட்டணத்தை அளவிட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு நேரத்தில் அனைவருக்கும் மின்சார கட்டணம் அதிகம் வந்ததாக குற்றச்சாட்டு
 

தமிழகத்தில் மாதந்தோறும் மின்சாரக் கட்டணத்தை அளவிடுவது பற்றி தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் இது பற்றி முதல்வருடன் ஆலோசனை செய்யப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார கட்டணம் அளவீடு செய்யப்படுகிறது. அரசு நிர்ணயித்துள்ள ஸ்லாப் கட்டணங்கள் காரணமாக மாதம் தோறும் மின்சார கட்டணத்தை அளவிட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி

வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு நேரத்தில் அனைவருக்கும் மின்சார கட்டணம் அதிகம் வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், மாதம் தோறும் ரீடிங் செய்யும் திட்டம் பற்றி பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இது குறித்து நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “தமிழகத்தில் மாந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வருவது பற்றி பரிசீலனை நடந்து வருகிறது. இது குறித்து தமிழக முதல்வருடன் ஆலோசனை செய்யப்படும்.


கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். கூடுதல் நிவாரணம் கோரி மனு கொடுத்துள்ளது பற்றி முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று அச்சம் இருந்தால் அருகில் உள்ள மையங்களுக்கு சென்று சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக நாளை பரிசீலனை செய்யப்படும்” என்றார்.