×

பருவமழை முன்னெச்சரிக்கை : முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை!

வருவாய்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். தென் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் இன்று ஆலோசனை நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். முன்னதாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று
 

வருவாய்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். தென் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் இன்று ஆலோசனை நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

முன்னதாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டமானது நடைபெறவுள்ளது.

இதே போல் கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான நிவர் புயலினால் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இருப்பினும் பெருமளவு பாதிப்பு ஏதுமில்லை என்பது கவனிக்கத்தக்கது.