தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்க வாய்ப்பு..!
May 30, 2026, 15:15 IST
தென்மேற்குப் பருவமழை ஏற்கெனவே தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் தொடங்கியது. இந்த நிலையில், அடுத்த 5 நாள்களில் தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.
அதன்படி, தமிழகம், கேரளம், லட்சத்தீவு, அரபிக்கடல், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மழை தொடங்கும். கேரளத்தில் அடுத்த 7 நாள்களுக்குள் தென்மேற்கு பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளது. எல்நினோ விளைவு ஜூன் மாதம் வலுவிழந்து செப்டம்பரில் மீண்டும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் மாதத்தில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும். நீண்ட கால சராசரி மழைப் பொழிவு 90% குறைவாக இருந்தால் மட்டுமே அது பற்றாக்குறையாகக் கருதப்படும் என வானிலை ஆராய்ச்சி மையத் தலைவர் கூறியுள்ளார்.