×

செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான திருச்சி நரேஷ் வீட்டில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல்

 

த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான திருச்சி நரேஷ் வீட்டில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்காக அக்கட்சியின் எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசப்பட்டதாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக கூறி சம்மன் அனுப்பட்ட நிலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி இதுவரை ஆஜராகவில்லை. நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டிய நிலையில், தற்போதுவரை செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான திருச்சி நரேஷ் வீட்டில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள நரேஷ் வீட்டில் போலீசார் இன்று நடத்திய சோதனையில் ரூ.13 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது வீட்டிலிருந்து ஏராளமான ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.