×

முந்தி செல்ல முயன்ற கணநேரம்... வேலூர் அருகே தலைமேல் கார் ஏறி 18 வயது வாலிபர் பரிதாப பலி!

 

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த கட்டுப்படியில் உள்ள இருதய மாதா கோவில் தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி ஆதில் என்பவரின் மகன், 18 வயதான ஆசிப், சாலையோரம் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


வேலூர் கணியம்பாடி அடுத்த இருதய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிலால். கூலி வேலை செய்து வரும் இவரது மகன் ஆசிப், 18. இவர் கடந்த 19-ம் தேதி சனிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் ஆரணியில் இருந்து வேலூர் நோக்கி சென்றுள்ளார்.

ஆசிப் கணியம்பாடியில் உள்ள பாரதி நகர் பகுதியில் சென்றபோது, அவருக்கு முன்னால் சென்ற வாகனம் மெதுவாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே மற்றொரு வாகனம் வருவதைக் கண்டு திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் இருசக்கர வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த ஆசிப் சாலையின் வலதுபுறம் கீழே விழுந்துள்ளார்.

அந்த நேரத்தில் எதிர்திசையில் வந்த கார் ஆசிப்பின் தலையில் ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆசிப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ஆசிப்பின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த கட்டுப்படியில் உள்ள இருதய மாதா கோவில் தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி ஆதில் என்பவரின் மகன், 18 வயதான ஆசிப், சாலையோரம் அலட்சியமாக நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் காரணமாக ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.#Vellorepic.twitter.com/rzUj4KOnnq

— Jaya Plus (@jayapluschannel) September 22, 2026