குட்பை சொன்னார் முகமது ஷமி: கனத்த இதயத்துடன் திடீர் ஓய்வு அறிவிப்பு..!!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி (36).
ஷமியின் உருக்கமான பதிவு:
வெள்ளை ஜெர்சியைக் கழற்றி வைத்தாலும், அதோடு இணைந்த நினைவுகளை ஒருபோதும் மறக்க மாட்டேன். முதல்முறை இந்திய டெஸ்ட் ஜெர்சியை அணிந்தபோது, என் நாட்டிற்காக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற ஒற்றைக் கனவு மட்டுமே இருந்தது. ஒவ்வொரு விக்கெட், காயங்கள், சவால்கள் மற்றும் மீண்டு வந்த தருணங்கள் எனக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்தன. டெஸ்ட் கிரிக்கெட் வெறும் ஆட்டம் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி. இன்று கனத்த இதயத்துடனும், எண்ணற்ற நினைவுகளுடனும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். களத்தில் எனது கடைசி டெஸ்ட் பந்தை வீசி முடித்திருக்கலாம். ஆனால் இந்திய அணிக்காக விளையாடிய பெருமை எப்போதும் என் நெஞ்சில் நிலைத்திருக்கும். நன்றி, டெஸ்ட் கிரிக்கெட். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
13 ஆண்டுகால நீண்ட நெடிய பயணத்திற்குப் பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.