“மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்ற திமுகவின் கனவு பலிக்காது”- மோடி
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி கூறினார்.
மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்ற திமுகவின் கனவு பலிக்காது. திமுகவின் கனவு கற்பனை கோட்டையாகும், கானல் நீராகும். திமுக எதை செய்தாலும் இறுதியில் முருக பக்தர்கள் வெல்வார்கள். தமிழகத்தில் அடுத்து அரசு அமைப்பத் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான். மலேசியாவில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்பட்டுவருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி மாற்றத்தை கொண்டு வரும் என மக்கள் தெளிவாக நம்புகின்றனர்.
தமிழ்நாட்டை கொள்ளையடித்தது திமுக ஆட்சிதான். மதுரை என்றாலே திமுகவுக்கு வேப்பங்காயாக கசக்கிறாது. மதுரையில் மாபியா மாடல் அரசை திமுகதான் கொண்டுவந்தது. பணம் நமக்கு, பிரச்சனை மக்களுக்கு என்பதே திமுக மாடல் அரசு. மக்களுக்காக மற்றவர்களை பணியாற்றவும் திமுக விடாது.பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. திமுக அரசு இழுத்தடிப்பதால் 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படவ்ல்லை. ” என்றார்.