முதல்வரின் கையை பிடித்து திட்டத்தை தொடங்கி வைத்த மோடி! நன்றி கூறிய விஜய்
சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் பங்கேற்ற விழா தேசிய கீதத்துடன் தொடங்கியது. ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடியும், முதலமைச்சர் விஜய்யும் இணைந்து தொடங்கி வைத்தனர். பிரதமரே திட்டத்தை தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அருகிலிருந்த முதல்வரின் கையை பிடித்து திட்டத்தை தொடங்கி வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், “சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு நெஞ்சார்ந்த நன்றி. சென்னை மெட்ரோ 3ஆம் கட்ட திட்டம், ஓசூர்- பெங்களூரு திட்டம், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மறு ஆய்வு செய்து ஒப்புதல் வழங்க வேண்டும். 100 நாள் ஆட்சியில் ஊழலற்ற நிர்வாகம் வழங்கப்படுகிறது பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் எந்த அதன் அடிப்படையில் அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டின் சார்பாக பிரதமர் மோடியை வரவேற்கிறேன். ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும். ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும் போது அதன் பலன் நேரடியாக மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் என்பதே நமது அணுகுமுறை. தமிழ்நாட்டின் இளைஞர்கள் நமக்கு மிகப்பெரிய பலமாக உள்ளனர். தமிழக இளைஞர்கள் உலகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே இலக்கு. 1.5 டிரில்லியன் வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு பயணிக்கிறது” என்றார்.