‘வளமார்ந்த அனுபவம், மதிநுட்பம் கொண்ட தலைமை’ - கார்கேவுக்கு வாழ்த்து சொன்ன மோடி..
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது பதிவில், “காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான ஸ்ரீ மல்லிகார்ஜுன் கார்கே ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆயுளுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தங்களது வளமார்ந்த அனுபவமும், மதிநுட்பம் கொண்ட தலைமையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் பெரும் பங்காற்றியுள்ளது.
சமூக நீதியின் மீது தாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பும், ஒடுக்கப்பட்டோரை உயர்த்துவதற்கான தங்களது முயற்சிகளும் எங்கள் அனைவருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. தங்கள் பயணம் தொடர்ந்து வெற்றியோடும், தாக்கம் செலுத்தும் பங்களிப்புடனும் திகழட்டும்.! “ என்று குறிப்பிட்டுள்ளார்.