×

தமிழ்நாட்டில் மதியம் 1 மணிவரை  2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

 

தமிழ்நாட்டில் இன்று முதல் 30.05.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய கிழக்கு, அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் வடக்கு நோக்கி நகர்ந்து ரீமால் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  ரீமால் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து நாளை காலைக்குள் வடமேற்கு, அதை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் மதியம் 1 மணிவரை  நெல்லை , கன்னியாகுமரி ஆகிய 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.