×

“திமுக தருவதாக சொன்ன தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு இல்லை”- கமல்ஹாசன்

 

எனக்கு அரசியல் என்பது தொழில் அல்ல...கடமை என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “திமுக தருவதாக சொன்ன தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு இல்லை. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்ற பரிந்துரை ஏற்புடையதல்ல. பேட்டரி டார்ச் சின்னத்துடனான மநீம தொண்டர்களின் பிணைப்பு உணர்வுப்பூர்வமானது. என் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க இயலாது. தேர்தல் அரசியலில் யாருமே இப்படி செய்ததில்லையே என்று கேட்பீர்களானால், ஒரு புத அரசியல் நாகரீகத்தின் விதை நான் போட்டது என்று பணிவோடு சொல்வேன். முதல்வர் அன்போடு அளிப்பதை பெருமையோடு மறுப்பதும் அன்பின் வடிவமே. 

தங்கள் குடும்பத்துக்காக எத்தனையோ பேர் தன் வீட்டை விட்டு, ஊரை விட்டு, நாட்டை விட எண்ணற்ற தியாகங்களை செய்கிறார்கள். தமிழ்நாடுதான் என் குடும்பம். நான் சீட்டுகள் விட்டுக்கொடுத்திருக்கிறேன். திறந்த மனதுடன், தெளிந்த உள்ளத்துடன் இம்முடிவை அறிவிக்கிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் 2.0 அரசு அவசியம். திமுக கூட்டணி வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சி தொடர வேண்டும், யார் என்ன சொன்னாலும் இதுதான் என்னுடைய நிலை. எனக்கு அரசியல் என்பது தொழில் அல்ல...கடமை” என்றார்.