×

மாட்டு சிறுநீர் குடிக்கச் சொல்கிறார்கள் - எம்.எல்.ஏ. ஆதங்கம்

 

மாட்டின் சிறுநீரை குடிக்கச் சொல்லி பிற்போக்கான கருத்துக்களை பாடத்திட்டத்தில் கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன், “மாட்டு சிறுநீரில் மருத்துவ குணம் இருக்கிறது, தினமும் நான் குடிக்கிறேன், நீங்களும் குடிங்க என்று சென்னை ஐஐடி இயக்குனர் சொல்கிறார். இது போன்ற பிற்போக்கான கருத்துக்களை பாடத்திட்டத்தில் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. மருத்துவ மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை, 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். மூத்த ஆசிரியர்கள் டெட் மதிப்பெண்ணை 55 சதவீதமாக மாற்றி அமைக்க வேண்டும். பள்ளிகள் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், அதன் பின் ஏஐ பயிற்சி வகுப்புகளை தொடங்க வேண்டும். ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வேண்டும்” என்றார்.