×

“அரசியலமைப்புச் சட்டத்தை புரட்டிப் பாருங்க எடப்பாடி பழனிசாமி”

ஒன்றிய அரசு என்பதை பற்றி தெரிந்துகொள்ள எடப்பாடி பழனிச்சாமி, அரசியலமைப்புச் சட்டத்தை புரட்டிப் பார்க்க வேண்டும் என எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் தெரிவித்துள்ளார். எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டையில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் அப்பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு காய்கறிகள் மற்றும் 5 கிலோ அரிசி உள்ளிட்டவற்றை 500 பேருக்கு வழங்கினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”தமிழக முதல்வர் வழிகாட்டுதல்
 

ஒன்றிய அரசு என்பதை பற்றி தெரிந்துகொள்ள எடப்பாடி பழனிச்சாமி, அரசியலமைப்புச் சட்டத்தை புரட்டிப் பார்க்க வேண்டும் என எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டையில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் அப்பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு காய்கறிகள் மற்றும் 5 கிலோ அரிசி உள்ளிட்டவற்றை 500 பேருக்கு வழங்கினார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”தமிழக முதல்வர் வழிகாட்டுதல் படி சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் முன்னாள் கழக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 500 நபர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. மத்திய அரசை மத்திய அரசு என்று அழைப்பது சிறந்தது என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒன்றிய அரசு என்றே உள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி அரசியலமைப்பு சட்டத்தை புரட்டிப் பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்,