×

அருள் எம்.எல்.ஏவிற்கு பாமகவில் புதிய பொறுப்பு- ராமதாஸ் அறிவிப்பு

 

பாமக தலைமை செய்தி தொடர்பாளராக சேலம் சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில்  உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜி.கே.மணி, ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்திமதி,சேலம் எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்துகு பின் தைலாபுரத்தில் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி, அருள் MLA உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார். 

இதனையடுத்து பாமக தலைமை செய்தி தொடர்பாளராக சேலம் சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் நியமனம் செய்யப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். ஏற்கனவே அருள் எம்.எல்.ஏ பாமக மாநில இணை பொதுச்செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.