மு.க.ஸ்டாலினின் அசையும் சொத்து ரூ.3.30 கோடி
முதல்வர் மு.க. ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி என வேட்புமனுவில் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலினின் சொத்து மதிப்பு விவரம் வெளியானது. முதல்வர் மு.க. ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி என வேட்புமனுவில் தகவல் வெளியாகியுள்ளது.முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.1.32 கோடி அசையும் சொத்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அசையா சொத்தாக முதல்வர் ஸ்டாலின் பெயரில் ரூ.2.95 கோடியும் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.2.10 கோடி உள்ளது. தனக்கு சொந்தமாக கார் கூட இல்லை என சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினிடம் வாகனங்கள், தங்க நகைகள் எதுவும் இல்லை, முதல்வரின் மனைவியிடம் ரூ.84.52 கோடி மதிப்பிலான தங்க நகைகள் உள்ளது என அவரது வேட்பு மனுவில் தகவல் வெளியாகியுள்ளது.