×

வார் ரூமை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் வார் ரூமை முதலமைச்சர் பார்வையிட்டார்.

சட்டமன்றத் தேர்தலை திறம்பட கையாளவும், கழக நிர்வாகிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் களத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு  காணவும் சென்னை  அண்ணா அறிவாலயத்தில் கட்டுப்பாட்டு அறை (War Room) அமைக்கப்பட்டுள்ளது. கட்சியினர் தங்களது தேர்தல் தொடர்பான சந்தேகங்களை கேட்கவும், புகார்கள்- கருத்துகளைத் தெரிவிக்கவும் 08069446900 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வார்ரூமை பார்வையிட்ட முதலமைச்சர் வந்துள்ள அழைப்புகள் குறித்து கேட்டறிந்தார்.