☰
×

“தன்மானமிக்க தாராபுரம் வாக்காளப் பெருமக்களே... தவெகவுக்கு தோல்வியை கொடுத்து துரத்தி அடியுங்கள்”- மு.க.ஸ்டாலின்

 

வாக்குச்சாவடிக்கு செல்லும் முன் உங்கள் மின்கட்டணத்தையும், மளிகைப் பொருட்களின் விலையையும் பார்த்துவிட்டுச் செல்லுங்கள். தன்மானம் உள்ள தாராபுரம் மக்களே உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தன்மானமிக்க தாராபுரம் தொகுதி வாக்காளப் பெருமக்களே… வாக்களிப்பீர் உதயசூரியன்☀️#Dharapuram #ByElection #VoteForDMK pic.twitter.com/RqG0odyIy2

— M.K.Stalin (@mkstalin) October 4, 2026


தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் எஸ்.சுகன்யாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக்கோரி, காணொளி வெளியிட்டு ஆதரவு கோரிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தன்மானமிக்க தாராபுரம் வாக்காளப் பெருமக்களே... தவெகவுக்கு தோல்வியை கொடுத்து துரத்தி அடியுங்கள். தாராபுரம் தொகுதியின் வளர்ச்சிக்காக, மக்களுக்கு உண்மையாக இருந்து பணியாற்றிட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும், உங்கள் வீட்டுப் பெண் எஸ்.சுகன்யா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். வாக்குச்சாவடிக்கு செல்லும் முன் உங்கள் மின்கட்டணத்தையும், மளிகைப் பொருட்களின் விலையையும் பார்த்துவிட்டுச் செல்லுங்கள். தன்மானம் உள்ள தாராபுரம் மக்களே உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.