×

"எந்த get-up ல் வந்தாலும் Get Out-தான்"- மு.க.ஸ்டாலின்

 

களம்2026 மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி vs NDA அல்ல, தமிழ்நாடு vs NDA என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “#களம்2026: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி vs NDA அல்ல; தமிழ்நாடு vs NDA! மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்ட கூட்டணியை, உடைந்து போனதை எல்லாம் ஒட்ட வைத்துக் கொண்டு வந்திருக்கிறது NDA. எந்த get-up-இல் வந்தாலும் அவர்களுக்கு Get Out-தான் அடுத்து, வாராவாரம் பிரமாண்ட மாநாடுகளைத் தமிழ்நாட்டின் அனைத்து மண்டலங்களிலும் நடத்த இருக்கிறோம். பிப்ரவரி 28 வரை தொகுதிகள்தோறும் #தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டோம் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன். #InternationalWomensDay வரை திமுக தொழில்நுட்ப மகளிரணி பரப்புரை உள்ளது. #வெல்லும்_தமிழ்ப்பெண்கள்-ஏ புறப்படுங்கள்! #DravidianModel ஆட்சி தொடர உழைத்திடுங்கள்!
#வெல்வோம்_ஒன்றாக!” எனக் குறிப்பிட்டுள்ளார்.