கொடிநாள் நிதி அளிப்பது நம் அனைவரின் கடமை - மு.க.ஸ்டாலின்
Updated: Dec 7, 2025, 11:25 IST
கொடிநாளை முன்னிட்டு சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்கொடை வழங்கினார்.
கொடிநாள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொடிநாள் நிதி அளிப்பது குடிமக்களான நம் அனைவரின் கடமை. தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கும் அவர்களின் குடும்ப நலனுக்காகவும் கொடிநாள் நிதியளிக்க வேண்டும். தாயகம் காக்க தன்னலம் மறந்து பணியாற்றும் முப்படை வீரர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு வணக்கங்கள். மக்கள் பாதுகாப்பாக வாழ உயிரைத் துச்சமாக எண்ணி காவல் காக்கும் படை வீரர்களின் பணி ஈடு இணையற்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.