×

"Policy, Action இரண்டிலும் நாட்டுக்கு வழிகாட்டும் தமிழ்நாடு"- மு.க.ஸ்டாலின்

 

எதிர்காலச் சந்ததியினர் வாழப் பாதுகாப்பான சூழலை உறுதிசெய்ய, தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆட்சி மன்றக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து செயல்படுத்துவதில் நமது அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “#ClimateChange: Policy, Action – இரண்டிலும் நாட்டுக்கு வழிகாட்டும் தமிழ்நாடு! துறையின் பெயரிலேயே காலநிலை மாற்றத்தைச் சேர்த்தது தொடங்கி, முன்னெப்போதும் இல்லாத அளவில் 500 கோடி ரூபாயை ஒதுக்கிப் பல இயக்கங்களைச் செயல்படுத்துவது வரை #DravidianModel அரசின் #ClimateChange செயல்பாடுகள்தான் இந்தியாவுக்கு Blueprint!