×

“இதனால்தான் நம்ம இளைஞர்கள் மேல எனக்கு எப்பவும் ஒரு தனி நம்பிக்கை உண்டு”- மு.க.ஸ்டாலின்

 

தமிழ்நாடு முழுக்க இருந்து வந்திருந்த நம்ம Young Athletes-கூட பேசினப்போ, அவங்களோட Clarity-ஐயும் Confidence-ஐயும் பார்த்து மிரண்டு போயிட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆச்சர்யம் தெரிவித்துள்ளார்.

Vibe with mks நிகழ்ச்சி குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “Champion-ஓட True Strength பதக்கங்கள்ல மட்டும் இல்ல, அவங்ககிட்ட இருக்குற Discipline, Pressure-ஐ handle பண்ணுற விதம், விடாமுயற்சி இது எல்லாத்துலயும்தான் இருக்கு!  தமிழ்நாடு முழுக்க இருந்து வந்திருந்த நம்ம Young Athletes-கூட பேசினப்போ, அவங்களோட Clarity-ஐயும் Confidence-ஐயும் பார்த்து மிரண்டு போயிட்டேன். Next Level Focus! இவங்க வெறும் விளையாட்டை மட்டும் விளையாடல, நம்ம தமிழ்நாட்டோட Future Legacy-யை உருவாக்கிட்டு இருக்காங்க. இதனால்தான் நம்ம இளைஞர்கள் மேல எனக்கு எப்பவும் ஒரு தனி நம்பிக்கை உண்டு!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


`Vibe with MKS' டிஜிட்டல் தொடரில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "தோனியின் captainship மிகவும் பிடிக்கும். எவ்வளவு டென்ஷன் ஏற்பட்டாலும் தோனி பொறுமையாக நடந்துகொள்வார். தோனி எனக்கு பெரிய வழிகாட்டியாக இருக்கிறார். எளிய குடும்பத்தில் இருந்து வந்ததால் கபில் தேவை மிகவும் பிடிக்கும். எனக்கு ஹாக்கி, கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன்" என்றார்.