திருப்பரங்குன்றம் தீர்ப்பு; முதல்வர் விளக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது என திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது.
— M.K.Stalin (@mkstalin) November 20, 2026
த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும். https://t.co/zxfkbM8BYN
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், நவம்பர் 24 அன்று ஒருமுறை மட்டும், கட்டுப்பாடுகளுடன் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்த அனுமதி தற்காலிகமானது, வழக்கின் தகுதி அடிப்படையிலான இறுதி முடிவாகக் கருதக்கூடாது எனக் கூறியுள்ள உச்சநீதிமன்றம், அந்தக் கல் தூண் பாரம்பரிய மத வழிபாட்டுக்கான இடம் என்று நீதிமன்றம் எந்த முடிவுக்கும் வரவில்லை. அங்கு தீபம் ஏற்றுவது அத்தியாவசிய மத நடைமுறையா அல்லது அதற்கு யாருக்கேனும் சட்டப்பூர்வ உரிமை உள்ளதா என்பதையும் இந்த உத்தரவு தீர்மானிக்கவில்லை. கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்றச் செல்லலாம். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும், தேவைப்பட்டால் CISF படையினரைப் பணியில் ஈடுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது. த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.