"பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது"- மு.க.ஸ்டாலின்
May 13, 2025, 15:00 IST
தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்புவழங்கியது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய கோவை மகளிர் நீதிமன்றம், அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.