×

"நேபாள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன" - மு.க.ஸ்டாலின்

 

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நேபாளத்தில் திடீர் வெள்ளம் கோர தாண்டவமாடிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. * ரசுவா மாவட்டத்தின் திமுரே, சியாப்ருபேசி பகுதிகளில் போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் கிராமங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்களை சேதப்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகளில் நேபாள ராணுவம், போலீஸ் மற்றும் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன. பல்வேறு மனித உயிர்கள் பலியாகியிருக்கும் சூழலில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு சிக்கியிருக்கின்றனர். ஒன்றிய அரசும் மாநில அரசும் விரைந்து செயல்பட்டு, நமது மக்கள் பத்திரமாகத் தாய்நாடு திரும்ப வேண்டுமென்று விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.